இந்தியா, ஏப்ரல் 23 -- கடத்தப்படும் ரேவதி.. மாயா செய்த சூழ்ச்சி, கார்த்திக் செய்யப்போவது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக், ரேவதி பார்ட்டிக்கு வந்திருந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, மாயா பார்ட்டி நடக்கும் இடத்திற்கு வந்து ஜூஸில் போதை மருந்தை கலக்குகிறாள். சர்வெண்ட் ஒருவனிடம் இந்த ஜூஸை கார்த்திக்கு கொடு என்று சொல்லி அனுப்புகிறாள்.

ஆனால் ரேவதி தவறுதலாக அந்த ஜூஸை குடித்து விடுகிறாள். இதையடுத்து ரேவதி போதையில் தள்ளாட தொடங்குகிறாள். பார்ட்டி முடிந்ததும் கார்த்தி மற்றும் ரேவதி என இருவரும் கிளம...