இந்தியா, மே 13 -- காராமணியில் பிரியாணி செய்திருக்கிறீர்களா? அது சூப்பர் சுவையானதாக இருக்கும். அதை முளைகட்டி செய்யும்போது இன்னும் சுவை கூடுதலாகவே இருக்கும். அதற்கு முதல் நாளே காராமணியை ஊறவைத்துக்கொள்ளவேண்டும். இரவு வடித்துவிட்டு, முளை கட்டி வைத்துக்கொள்ளவேண்டும். முளைகட்டிய பயிரை சேர்த்து செய்யும்போது சூப்பர் சுவையானதாக இருக்கும்.

* பாஸ்மதி அரிசி - இரண்டு கப் (அரை மணி நேரம் ஊறவைத்துக்கொள்ளவேண்டும்)

* பட்டை - 2

* கிராம்பு - 4

* ஏலக்காய் - 2

* மிளகு - அரை ஸ்பூன்

* சோம்பு - அரை ஸ்பூன்

* ஸ்டார் சோம்பு - 1

* கல்பாசி - கால் ஸ்பூன்

* ஜாவித்திரி - சிறிதளவு

பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகு, சோம்பு, ஸ்டார் சோம்பு, கல்பாசி, ஜாவித்திரி என அனைத்தையும் கடாயில் சேர்த்து வறுத்து, சிறிது நேரம் ஆறவைத்து பொடித்துக்கொள்ளவேண்டும்.

* நெய் - 2 டேபிள் ...