இந்தியா, ஏப்ரல் 3 -- தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான ஆந்திராவில் செய்யப்படும் உணவுகளில் சில தமிழ்நாட்டினை ஒத்த சுவையை கொண்டுள்ளன. ஆனால் அங்கு செய்யப்படும் உணவுகளில் காரம் அதிகமாக இருக்கும். ஆந்திரா சமையல் என்றால் அதில் நிச்சயமாக காரமான சுவை இருக்கும் என்ற அளவிற்கு அவர்கள் இந்த வகை உணவுகளை விரும்புகிறார்கள். அதிலும் குறிப்பாக ஆந்திர மாநிலத்தின் குண்டூர் காரத்திற்கு பிரபலமான ஊராகும். இந்த ஊரின் சிறப்பு உணவான் குண்டூர் சிக்கன் மசாலா எப்படி செய்வது என காணலாம்.

மேலும் படிக்க | கறிவேப்பிலை ஊறுகாய் : ஆந்திரா ஸ்பெஷல்! காரஞ்சாரமான கறிவேப்பிலை ஊறுகாய்! எப்படி செய்வது என்று பாருங்க!

அரை கிலோ சிக்கன்

கால் டீஸ்பூன் மஞ்சள் தூள்

ஒரு டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள்

3 டேபிள்ஸ்பூன் எண்ணெய்

1 டீஸ்பூன் கடுகு

1 டீஸ்பூன் சீரகம்

2 பெரிய வெங்காயம்

2 தக்காளி...