இந்தியா, ஏப்ரல் 24 -- சுந்தர் சி - வடிவேலு காம்போவில் பல வருடங்கள் கழித்து வெளியாகி இருக்கும் திரைப்படம் கேங்கர்ஸ். சுந்தரி இயக்கி நடித்திருக்கும் இப்படத்தில் கேத்ரின், மைம் கோபி, பகவதி பெருமாள் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். சத்யா இசையமைத்து இருக்கிறார். இப்படம் எப்படி இருக்கிறது என்பதை இங்கே பார்க்கலாம்.

அரசன் கோட்டையில் செயல்படும் பள்ளியில் படிக்கும் பள்ளி மாணவி ஒருவர் திடீரென்று காணாமல் போகிறார். இந்த நிலையில் மாணவியை கண்டுபிடித்து தருமாறு முதல்வர் தனிப்பிரிவிற்கு அந்தப்பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கும் சுஜிதா ( கேத்ரின்) புகார் கொடுக்கிறார். கூடவே அந்த ஊரில் கள்ளச்சாராயம் உள்ளிட்ட சமூக விரோத செயல்களை செய்து வரும் மலையரசன் (மைம் கோபி) மற்றும் அவரது சகோதரர் கோட்டையரசன் (அருள்தாஸ்) ஆகியோர் மீதும் புகார் கொடுக்கிறார்.

இந...