இந்தியா, ஏப்ரல் 20 -- ரஜினிகாந்தை அறிமுகப்படுத்தி ஆரம்பகட்டத்தில் சில படங்களில் நடிக்க வைத்தது இயக்குநர் கே. பாலசந்தர் என்றால், அவரை ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக ஆக்கியது எஸ்பி முத்துராமன். இதைத்தொடர்ந்து ரஜினியினிடம் இருக்கும் காமெடி குணாதியங்களை வெளிக்கொண்டுவந்து சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து வயதினரும் ரசிக்கும் ஹீரோவாக ரஜினியை மாற்றியது இயக்குநர் ராஜசேகர் என்றால் அது மிகையாகாது.

ரஜினியை வைத்து இயக்குநர்களுக்கு பக்க பலமாக அமைந்தது எழுத்தாளர் பஞ்சு அருணாச்சலத்தின் கதை, திரைக்கதை அமைப்பு. அந்த வகையில் பஞ்சு அருணாச்சலம் கதையில் கிராமத்து பின்னணியில் உருவாகி மற்றொரு மாஸ் ஹிட் படமாக அ்மைந்ததுதான் தம்பிக்கு எந்த ஊரு.

ஊதரித்தனமாக சுத்தும் ரஜினியை உழைப்பின் அருமை தெரிந்துகொள்வதற்காக அவரது தந்தை விஎஸ் ராகவன், கண்டிப்பான தனது நண்பர் கண்காணிப்ப...