இந்தியா, ஜூன் 1 -- நடிகர் விஷ்ணு மஞ்சு கண்ணப்பா ஹாஸ்க் டிஸ்க்கை தன்னுடைய சகோதரர் மனோஜின் ஊழியர்கள் திருடி இருக்கலாம் என்று குற்றம் சாட்டியதற்கு மனோஜ் பதில் கொடுத்து இருக்கிறார்.

அவரின் பைரவம் படத்தின் வெற்றிவிழாவில் இது குறித்து அவர் பேசும் போது, ' நான் அதற்கு பதில் சொல்ல விரும்பவில்லை. கண்ணப்பாவிற்கு நான் எனது வாழ்த்துகளை இப்போது தெரிவித்துக்கொள்கிறேன்' என்று கூறினார்.

கண்ணப்பா: தெலுங்கில் வரலாற்று புதினத்தை தழுவி எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம் 'கண்ணப்பா'. மிகவும் பிரபலமான மகாபாரத தொடரை இயக்கிய முகேஷ் குமார் சிங் இந்தப்படத்தை இயக்கி இருக்கிறார்.

சிவனின் தீவிர பக்தரான கண்ணப்பரை மையமாக வைத்து இந்தப்படத்தின் கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. படத்தின் முக்கியமான கண்ணப்பர் கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு நடித்திருப்பதோடு மட்டும...