இந்தியா, ஜூன் 26 -- போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பாக போலீசாரின் விசாரணை வளையத்திற்குள் இருந்த நடிகர் கிருஷ்ணா கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பான விவகாரத்தில் போலீசார் நடிகர் கிருஷ்ணாவை ஆஜராகும் படி சம்மன் அனுப்பினர். அதனடிப்படையில் கிருஷ்ணா நேற்று தன்னுடைய வழக்கறிஞருடன் ஆயிரம் விளக்கு காவல்நிலையத்தில் ஆஜராகினார். அவரிடம் நேற்றிலிருந்து கிட்டத்தட்ட 24 மணி நேரமாக விசாரணை நடைபெற்று வருகிறது.

அவருக்கு மருத்துவசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. மேலும் கிருஷ்ணா தனக்கு வயிற்றில் அலர்ஜி, வேகமாக இதயம் துடிப்பது உள்ளிட்ட பிரச்சினைகள் இருப்பதால் தன்னால் போதைப்பொருளை பயன்படுத்த முடியாது என்று கூறி அதற்கான மருத்துவசான்றிதழ்களையும் சமர்பித்தார்.

மருத்துவ முடிவும் அவருக்கு சாதகமாகவே வந்தது. அவரது வீட்டில் சோதனை நடத்திய ...