இந்தியா, ஏப்ரல் 30 -- காஞ்சி சங்கர மடத்தின் 71வது மடாதிபதியாக பொறுப்பேற்கும் கணேஷ் சர்மா திராவிட்டிற்கு காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் உள்ள பஞ்சகங்கை தீர்த்தத்தில் சன்யாச தீட்சை அளிக்கப்பட்டது.

மேலும் படிக்க:- அட்சய திருதியை 2025: 'இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் இதோ!'

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 71வது மடாதிபதியாக ஆந்திர மாநிலம், அன்னவரம் கிராமத்தைச் சேர்ந்த 24 வயது ரிக் வேத பண்டிதர் ஸ்ரீ துட்டு சத்ய வெங்கட சூர்ய சுப்ரமண்ய கணேஷ் சர்மா திராவிட் இன்று நியமிக்கப்பட்டார். காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலின் பின்புறம் உள்ள பஞ்சகங்கை தீர்த்தத்தில் அதிகாலை 6 முதல் 9 மணி வரை நடைபெற்ற புனித சன்யாச தீட்சை விழாவில், தற்போதைய 70வது மடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவருக்கு தீட்சை வழங்கினார். இனி ஸ்ரீ துட்டு சத்ய வெங்கட...