இந்தியா, ஜூன் 19 -- கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்ததன் முதலாம் ஆண்டு நினைவுநாளையொட்டி "கள்ளச்சாராய ஆட்சிக்கு, கள்ளக்குறிச்சியே சாட்சி!" என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ட்வீட் செய்து உள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் வலைத்தளத்தில் அவர் பதிவிட்டுள்ள இடுகையில், கள்ளக்குறிச்சி கருணாபுரம் கண்ணீரில் மூழ்கி இன்றோடு ஓராண்டு! 67 உயிர்கள் மரணித்தது கள்ளச்சாராயத்தால் மட்டும் அல்ல. தன் நிர்வாகத் திறமின்மையை மறைக்க பச்சைப்பொய் சொன்ன இந்த ஸ்டாலின் அரசின் கள்ளத்தனத்தாலும் தான்!

மரக்காணம் மரணங்களின் போதே திருந்தாத திமுக அரசின் அலட்சியம், கள்ளக்குறிச்சியில் 67 உயிர்களைக் காவு வாங்கியது! கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயப் புழக்கம் இருப்பதை எதிர்க்கட்சி அதிமுக எச்சரிக்கை விடுத்தோமே- அந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கிடப்ப...