இந்தியா, மார்ச் 2 -- அஜித்குமார்: அஜித் ஷாலினி திருமணத்தில் நடந்த சம்பவம் குறித்து, அந்தத் திருமணத்தின் பி.ஆர். ஓவாக பணியாற்றிய நிகில் முருகன் டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலுக்கு அண்மையில் அளித்த பேட்டியில் பேசி இருக்கிறார்.

மேலும் படிக்க | ஸ்ரீதேவியை திருமணம் செய்ய விரும்பிய ரஜினிகாந்த்.. காதலை சொல்லாமல் மெளனமாக இருந்த பின்னணி

இது குறித்து அவர் அதில் பேசும் போது, 'அஜித் ஷாலினி திருமணம் சென்னை கன்னிமாரா ஹோட்டலில் நடைபெற்றது.அதற்கு முன்னதாக, அனைவரும் அமர்ந்து, கல்யாணத்தை எப்படி நடத்தலாம் என்று ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தோம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஐடியாவை சொன்னார்கள்.

இந்த நிலையில் நான் சார் என்னிடம் ஒரு ஐடியா இருக்கிறது என்றேன். அஜித் சார் என்ன ஐடியா என்று கேட்டார். உடனே நான் நம் கல்யாணத்திற்கு வருபவர்கள் அனைவருமே பிரபலங்களாகத்தான் இருப்...