இந்தியா, பிப்ரவரி 22 -- கல்யாண விருந்து சாம்பார் : தினமுமே சாம்பார் சாப்பிட்டாலும், கல்யாண விருந்தில் பரிமாறப்படும் சாம்பாரின் சுவைக்கு ஈடாக செய்வது கடினம்தான். ஆனால் அதையும் எளிதாக வீட்டிலேயே செய்ய முடியும். அது எப்படி என்று பாருங்கள். இதை நீங்கள் ஒருமுறை ருசித்தால் மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள். அனைவருக்கும் பிடித்தமான சுவையில் இருக்கும் இந்த சாம்பார் ரெசிபி இதோ. செய்து சாப்பிட்டு மகிழுங்கள். இதிலே எண்ணற்ற காய்கறிகள் சேர்க்கப்படுவதால், அப்பளம் மற்றும் ஆம்லேட் கூட போதுமானதுதான். அதுவும் இல்லாவிட்டால் கூட நன்றாகத்தான் இருக்கும். தனியாக தொட்டுக்கொள்ள எதுவும் தேவையில்லை.

* பரங்கிக்காய் - கால் கப் (நறுக்கியது)

* முருங்கைக்காய் - கால் கப் (நறுக்கியது)

* அவரைக்காய் - கால் கப் (நறுக்கியது)

* வெண்டைக்காய் - கால் கப் (நறுக்கியது)

* க...