இந்தியா, ஏப்ரல் 22 -- பிரபல நடிகரான விஷ்ணு விஷால் தன்னுடைய முதல் மனைவியான ரஜினியை கடந்த 2018ம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஆர்யன் என்ற மகன் இருக்கிறான். இதனையடுத்து பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலாவுடன் காதலில் இருந்த விஷ்ணு, கடந்த 2021ம் ஆண்டு அவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்தத்தம்பதிக்கு தற்போது பெண் குழந்தை பிறந்து இருக்கின்றது. இது குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள விஷ்ணு விஷால், ' எங்களுக்கு பெண் குழந்தை பிறந்து இருக்கிறது. ஆர்யன் தற்போது அண்ணன் ஆகிவிட்டான். எங்களது 4 ஆவது ஆண்டு கல்யாண நாளில் இறைவனிடம் இருந்து இந்த அழகான பரிசை இறைவன் எங்களுக்கு கொடுத்திருக்கிறார். உங்களது அன்பும் ஆசீர்வாதமும் வேண்டும்' என்று பதிவிட்டு இருக்கிறார்

முன்னதாக, பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலாவை கல்யாணம் செய்து கொண்...