இந்தியா, மார்ச் 9 -- இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் சோயா சங்க் வைத்து பல விதமான உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. அதிலும் நம் தமிழ்நாட்டில் அசைவ உணவுகள் சாப்பிட முடியாத சூழல்களில் மக்கள் இந்த சோயாவை சாப்பிடுகின்றனர். இதில் அதிகமான நன்மைகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனை வைத்து அசைவத்தில் செய்யக்கூடிய அனைத்து விதமான உணவுகளையும் செய்து பார்க்கலாம். இந்த வரிசையில் சப்பாத்தி, சாதம் என எல்லாவற்றிற்கும் சேர்த்து சாப்பிடுமாறு சோயா சங்க் குருமா செய்வது எப்படி என்பதை இங்கு பார்ப்போம்.

மேலும் படிக்க | இடியாப்பத்திற்கு செம குருமா இது தான்! மதுரை வெஜ் பால் குருமா! இதோ ரெசிபி!

தேவையான பொருட்கள்

அரை கப் சோயா சங்க்

கால் கப் எண்ணெய்

3 டீஸ்பூன் புளி சாறு

1 டீஸ்பூன் வற மிளகாய் தூள்

1 டீஸ்பூன் மல்லித் தூள்

அரை டீஸ்பூன் கரம் மசாலா

2 சிட்டிகை மஞ்சள்...