இந்தியா, மார்ச் 8 -- கருவாடு இருந்தால் இதுபோல் கருவாட்டு தோரன் செய்து சாப்பிட்டு பாருங்கள். உங்கள் நாவுக்கு அத்தனை சுவையை தரக்கூடியது இந்த கருவாட்டு தோரன். இதை சூடான சாதத்தில் சேர்த்து பிசைந்து சாப்பிடலாம் அல்லது இதை ஏதேனும் சாதத்துக்கு தொட்டுக்கொண்டும் சாப்பிடலாம். இதை நீங்கள் ஒருமுறை ருசித்தால் தினமும் சாப்பிடவேண்டும் என்று நினைப்பீர்கள். இது உங்களுக்கு அவ்வளவு பிடிக்கும். கருவாடு பிரியர்களுக்கு கேட்கவே வேண்டாம் சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள். இந்த கருவாட்டு தோரனை எப்படி செய்வது என்று தெரிந்துகொள்ளலாமா?

* கூனிக் கருவாடு - 50 கிராம்

(தண்ணீர் ஊற்றி கழுவி சுத்தம் செய்து எடுத்துக்கொள்ளவேண்டும்)

* தேங்காய்த் துருவல் - ஒரு கப்

* சோம்பு - ஒரு ஸ்பூன்

* கறிவேப்பிலை - ஒரு கொத்து

(தேங்காய்த் துருவல், சோம்பு மற்றும் கறிவேப்பிலை அனைத்தையும் க...