இந்தியா, மார்ச் 3 -- கோயம்புத்தூர் மருத்துவர் உஷா நந்தினி தனது சமூக வலைதளப் பக்கங்கள் மூலம் பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு எளிய மருத்துவம் மற்றும் உணவு முறைப்பழக்கங்கள் மாற்றத்தின் மூலம் கிடைக்கக்கூடிய தீர்வுகளை வழங்கி வருகிறார். கருமுட்டை வளர்ச்சியை பாதிக்கக்கூடிய உணவுகள் குறித்து அவர் கூறியுள்ள கருத்துக்கள் என்னவென்று பாருங்கள்.

கருமுட்டை வளர்ச்சியை சீர்குலைக்கக்கூடிய உணவுகள் என்ன? நாம் அன்றாடம் சேர்த்துக்கொள்ளும் உணவுகள்தான் அவை. அவற்றை தவிர்த்து என்ன உணவுகளை சேர்த்தால் நாம் ஆரோக்கியமான கருமுட்டையைப் பெற முடியும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

பதப்படுத்தப்பட்ட சிவப்பு இறைச்சியை நீங்கள் அதிகம் சாப்பிடும்போது அது கருமுட்டை வளர்ச்சியைத் தடுக்கிறது. ஆட்டு இறைச்சி அல்லது கோழி இறைச்சி என எதுவாக இருந்தாலும் அதை பதப்படுத்தி பிரிசர்வேடிவ்கள்...