Hyderabad, பிப்ரவரி 21 -- ஒவ்வொரு தனிப்பட்ட நபரும் அவர்களை மெருக்கேற்றிக் கொள்ள விரும்புகிறார்கள். மற்றவர்கள் முன் நேர்த்தியான ஆடையுடன் தோன்ற வேண்டும் என நினைக்கிறார்கள். உலகில் உள்ள ஒவ்வொரு தனி மனிதரும் ஒரு தனிப்பட்ட அழகுடனும், ஆளுமையுடனும் வாழ்கின்றனர். இந்த நிலையில் உடை ஒருவரது அனைத்து விதமான நம்பிக்கைக்கும் ஆரம்ப புள்ளி எனக் கூறலாம். ஒரு நேர்காணல் செல்லும் போதும், மேடை ஏறி பேசப் போகும் போதும் நம் உடை மீது நமக்கு நம்பிக்கை வேண்டும். சற்று மாநிறமாக இருப்பவர்கள் எந்த நிற உடையை அணியலாம் என இங்கு பார்ப்போம்.

இந்தியர்கள் பல தோல் நிறங்களைக் கொண்டுள்ளனர். சிலர் வெள்ளை தோலைக் கொண்டுள்ளனர், மற்றவர்கள் பழுப்பு நிறத்தில் உள்ளனர். மற்றவர்கள் சற்று வெளிரிய நிறத்துடன் உள்ளனர். மேலும் சிலர் மாநிறம் மற்றும் அடர் நிறத் தோலைக் கொண்டுள்ளன. தோல் நிறத்தைப...