இந்தியா, ஏப்ரல் 17 -- முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் கோயில் கோபுரம் போல் அலங்கரிக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் நினைவிடம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரத்தை ஒத்த வடிவில் பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் மானிய கோரிக்கை விவாதம் நடைபெறும் நாளில் இந்த அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ லோகோவாக ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் கோபுரம் பயன்படுத்தப்படுவதை அடிப்படையாகக் கொண்டு இந்த அலங்காரம் அமைக்கப்பட்டுள்ளது.

தினமும் திமுக சார்பில் கருணாநிதி நினைவிடம் பூக்களால் அலங்கரிக்கப்படுவது வழக்கம். ஆனால், இன்றைய அலங்காரம் கோயில் கோபுர வடிவில் அமைக்கப்பட்டதால், எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்துள்ளன. "கோயில் ...