இந்தியா, ஏப்ரல் 18 -- பாரம்பரிய மருத்துவத்தில் கருஞ்சீரகம் நூற்றாண்டுகளாக சிறந்த உணவாக இருக்கிறது. அண்மை அறிவியல் ஆய்வில் கருஞ்சீரகத்தில் தைமோகுனன் என்ற இதன் உட்பொருள் வீக்கத்துக்கு எதிரான குணங்கள் கொண்டது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கருஞ்சீரகம் நுரையீரல் ஆரோக்கியம், மூட்டு வலி, செரிமானக் கோளாறுகள், இதய ஆரோக்கியம் மூளை இயக்கம் மற்றும் ரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்துவது என இயற்கை தீர்வுகள் எண்ணறவை கொண்டதாக உள்ளது.

கருஞ்சீரகம் புதிய பொருள் கிடையாது. இது பல ஆயிரம் ஆண்டுகளாக பாரம்பரிய மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் புதிதாக அறிவியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்த தகவல் என்னவென்றால், கருஞ்சீரகம் வீக்கத்துக்கு எதிரான நற்குணங்கள் நிறைந்த ஒன்றாக உள்ளது என்பதுதான். இது இஞ்சியைவிடவும் வீக்கத்துக்கு எதிரான நற்குணங்கள் நிறைந்த...