இந்தியா, மே 21 -- நமது நாள்காட்டியில் சில நாட்களில் கரிநாள் என போட்டிருப்பதை கண்டிருப்பீர்கள். சிலருக்கு அது என்ன கரிநாள் என குறிப்பிடப்பட்டுள்ளது என்ற கேள்வி ஏற்பட்டிருக்கும். சில விஷயங்களை எச்சரிப்பதற்காகவே நாள்காட்டிகள் அப்படி குறிப்பிடப்பட்டுள்ளன. ஜோதிட வல்லுனர்கள் மற்றும் முன்னோர்கள் இதுபோன்ற குறிப்பை நமக்காக கொடுத்துள்ளனர்.

ஜோதிடத்தை முழுமையாக அனைவரும் தெரிந்து கொள்ளாமல் இருக்கலாம். ஆனால் பாமர மக்கள் சில சிக்கல்களில் இருந்து எளிதாக புரிந்து கொண்டு தப்பித்துக் கொள்வதற்காகவே நாள்காட்டிகளில் சில குறிப்புகள் கொடுக்கப்படுகின்றன. அதில் ஒன்றுதான் இந்த கரிநாள்.

மேலும் படிங்க| ராகு பகவானின் அதிர்ஷ்ட பலன்களை பெறுகின்ற ராசிகள்

கரிநாள் என காலண்டரில் குறிப்பிடப்பட்டிருக்கும் தினத்தில் ஒரு முக்கியமான இயற்கை மாறுபாடு இருப்பதாக ஆன்மீகம் கூறுகிறத...