இந்தியா, மார்ச் 1 -- கயல் சீரியல் மார்ச் 01 எபிசோட்: சுப்ரமணியின் ஆட்களால் தேவி கடத்தப்பட்ட நிலையில், அவரைத் தேடி மொத்த குடும்பமும் அலைகிறது.

இந்த நிலையில், தேவி இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அங்கு வந்த சரவண வேலுவை அடியாட்கள் தாக்கியதாகத் தெரிகிறது. இதில் சரவண வேலு ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து கிடக்க, எழ முடியாமல் தவிக்கிறார்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட தேவி மெல்லா மெல்ல அங்கிருந்து எஸ்கேப் ஆக முயற்சி செய்கிறார். அப்போது , சரவண வேலுவை தேவி பார்க்கிறார்.

மேலும் படிக்க: தேவியை தேட களமிறங்கிய சரவண வேலு.. கயல் சீரியல்

இந்நிலையில், போலீஸ் ஸ்டேஷனில் உள்ள கயல் குடும்பம், தேவியை கடத்திய கார் பற்றி கூறுகின்றனர், மேலும் போலீசில் புகார் அளித்தாலும் நாமும் தேவியை தேட வேண்டும் என்கின்றனர். இதைக் கேட்ட எழிலுக்கு அந்த கார் பற்றிய நியா...