இந்தியா, பிப்ரவரி 27 -- கயல் சீரியல் பிப்ரவரி 27 எபிசோட்: கயல் சீரியலில் இருந்து இன்று வெளியான ப்ரோமோவில் 'தர்மலிங்கத்தின் மகனை வைத்து, தேவியை கொல்ல விக்னேஷின் மாமா சதித்திட்டம் தீட்டுகிறார். அதன் படி, தர்மலிங்கத்தின் மகன் கூலிப்படையை ஏவி தேவியை கடத்துகிறான்.

இதை பார்த்த கயல் குடும்பத்தினர் கதறுகிறார்கள். ரெளவுடிகள் தேவியை கடத்திச் செல்லும் வழியில், ஆட்டோ ஓட்டுனர் ஒருவருக்கும், ரெளடிகளுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. அந்த ஆட்டோவில் எழில் இருந்தான். இதைப் பார்த்த தேவி, எழிலால் தான் காப்பாற்றப்படுவோமா என்று தவிக்கிறாள். ஒரு கட்டத்தில் அந்த ஆட்டோ அங்கிருந்து கிளம்புகிறது.' இது தொடர்பான நிகழ்வுகள் அதில் இடம் பெற்று இருக்கின்றன.

கயல் சீரியலில் நேற்றைய தினம் கயல், டீனிடம் கேண்டீன் ஆர்டரை வாங்கி விட்டதாக தன்னுடைய அண்ணனான குணாவிடம் கூறினாள். ...