இந்தியா, பிப்ரவரி 24 -- கயல் சீரியல் பிப்ரவரி 24 எபிசோட்: கயல் சீரியலில், வேதவள்ளி மற்றும் அவரது அண்ணனின் அத்தனை சூழ்ச்சிகளையும் சதியையும் மீறி விக்னேஷ் தேவி மீது வைத்த பாசத்தினால் வளைகாப்பிற்கு வந்தார். ஆனால், வந்த இடத்தில் வளைகாப்பு முடிந்ததும் சுப்ரமணியும், வடிவும் திட்டம் போட்டு விக்னேஷை அசிங்கப்படுத்தினர். அதே சமயம் சரவண வேலுவும் வேதவள்ளியிடம் தகராறு செய்துள்ளான்.

இதனால், ஆத்திரம் தாங்காத விக்னேஷ், தேவியிடம் உனக்கு நான் வேணும்ன்னா என்னோட இப்போவே வா. இல்லைன்னா இவங்களோடவே காலம் முழுக்க இருந்திரு எனச் சொல்லி உத்தரவிடுகிறான். ஆரம்பித்தில் விக்னேஷுடன் செல்ல முடிவெடுத்த தேவி, பிறகு என் அக்கா தான் எனக்கு முக்கியம் எனக் கூறி இங்கேயே தங்கி விடுகிறாள்.

தேவியின் முடிவால், விரக்தியின் உச்சத்திற்கு சென்ற விக்னேஷ் குடிக்கிறான். அப்போது அங்கு வந்...