இந்தியா, ஏப்ரல் 24 -- 'அரண்மனை 4' படத்தின் வெற்றிக்குப் பிறகு சுந்தர் சி இயக்கத்தில் வைகைப்புயல் வடிவேலு நடித்திருக்கும் 'கேங்கர்ஸ்' திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது. இந்தப் படத்தில் சுந்தர்.சி நாயகனாக நடித்து தயாரித்திருந்தாலும், 'கேங்கர்ஸ்' சிங்காரம் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் வடிவேலு நடித்துள்ளார். மேலும் கேத்ரின் தெரசா, முனீஸ்காந்த், பக்ஸ், மைம் கோபி, ஹரிஷ் பேரடி, அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஏற்கனவே சுந்தர் சி இயக்கத்தில் வடிவேலு நடித்திருந்த வின்னர், கிரி, நகரம் மறுபக்கம் ஆகிய படங்களிலும், சுந்தர்.சியுடன் வடிவேலு நடித்த தலைநகரம் உள்ளிட்ட படங்களிலும் இவர்களது காமெடி கூட்டணி செம்ம ஹிட் அடித்தது. அந்தவரிசையில், கிட்டதட்ட 15 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு சுந்தர் சி - வடிவேலு காமெடி கூட்டணி இணைந்திருக்கிறது என்றால் ரசிகர்க...