இந்தியா, மார்ச் 19 -- தென்னிந்திய பகுதிகளில் வட இந்திய உணவுகள் என்றால் எல்லாருக்கும் மிகவும் பிடிக்கும். பல வட இந்தியா ரெஸ்டாரண்ட்களை நம்மால் பார்க்க முடிகிறது. அங்கு நம்மூர் மக்களின் கூட்டமும் நிரம்பி வழிகிறது. இதற்கு காரணம் அந்த உணவின் தனிப்பட்ட சுவையை நம்மூர் மக்கள் விரும்புகின்றனர். இதில் சில உணவுகளை நாம் வீட்டிலேயே செய்யலாம். இவ்வாறு எளிதில் தயாரிக்கக்கூடிய உணவு ஏதேனும் இருந்தால், அதை நாம் கண்டிப்பாக வீட்டிலேயே செய்து பார்க்க வேண்டும். குறிப்பாக நம் வீட்டில் எல்லாப் பொருட்களும் இருப்பதால் உடனடியாக ஒரு உணவை செய்யலாம். சிக்கன் சாப்பிட விரும்புபவர்கள் அசைவ உணவு உண்பவர்கள், பூண்டு பட்டர் சிக்கனை முயற்சித்துப் பார்க்கலாம்.

சுவையிலும், மணத்திலும் இதை மிஞ்சும் உணவு வேறு எதுவும் இல்லை. இதில் பயன்படுத்தப்படும் பொருட்கள் கூட ஆரோக்கியமானவை. என...