இந்தியா, பிப்ரவரி 26 -- நமது வீட்டில் திடீரென யாரேனும் விரதம் இருந்தாலோ அல்லது அசைவ உணவுகள் சாப்பிடக்கூடாது என மருத்துவர்கள் கூறினாலோ அதன் மீது அலாதியான பிரியம் ஏற்படும். ஏனெனில் அசைவ உணவுகள் மீது பலருக்கு அதிகமான விருப்பம் இருந்து வருகிறது. இது போன்ற சமயங்களில் அசைவ உணவு சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தை தவிர்க்க வேண்டும். இதனை நிவர்த்தி செய்வதற்காகவே இயற்கை அத்தகைய காய்கறிகளை வழங்கியுள்ளது. அதில் முக்கியமான ஒன்று தான் காளான். அசைவ உணவுகளை போலவே காளான் வைத்து செய்யும் உணவுகளும் ஒரே மாதிரியான சுவையை கொடுக்க வல்லது. இதன் அடிப்படையில் நமது வீட்டில் காளான் பிரியாணி, காளான் கிரேவி போன்றவை அசைவ உணவுகளை சமைக்கும் முறையிலேயே செய்யப்படுகின்றன. இன்று அந்த வரிசையில் வாசனை கமழும் காளான் குருமா எப்படி செய்வது என்பதை இங்கு காணலாம். இதனை சூடான சாத முதல் ச...