இந்தியா, ஜனவரி 29 -- சேலம் மாவட்டம் சங்ககிரி கிராமத்தை சேர்ந்தவர் சந்திர சூரியன்(35), பட்டப்படிப்பு படித்திருந்தபோதும், விவசாயத்தின் மீதுள்ள ஆர்வம் காரணமாக சொந்த ஊரிலேயே கடந்த 10 ஆண்டுகளாக 4 ஏக்கர் நிலத்தில் பருத்தி, கத்திரி, கரும்பு, நெல் என மாற்று விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார்.

இளைய தலைமுறை விவசாயத்தில் ஈடுபட வேண்டும், விளை பொருள்களுக்கு உரிய விலையை ஒன்றிய, மாநில அரசுகள் நிர்ணயம் செய்ய வேண்டுமென வலியுறுத்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ஒற்றைமாடு பூட்டிய மாட்டுவண்டியில் பயணத்தைதுவக்கி உள்ளார்.

இவர் கூறுகையில், "கடந்த 1ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து மாட்டுவண்டி பயணத்தை துவக்கி, 3,600 கிமீ மாட்டு வண்டியில் பயணம் செய்து காஷ்மீரை 8 மாதங்களில் சென்றடைய முடிவு செய்துள்ளேன்". கன்னியாகுமரியிலிருந்து...