இந்தியா, ஏப்ரல் 8 -- கடுக்காயை நீங்கள் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்கிறீர்களா? உங்களுக்கு கடுக்காய் எத்தனை நன்மைகளைக் கொடுக்கிறது என்று மருதுதுவர் உஷா நந்தினி குறிப்பிட்டுள்ளார். ஆனால் நீங்கள் கடுக்காயை எப்படி சாப்பிட வேண்டும் என்று எண்ணிக்கொண்டு இருக்கிறீர்களா? கடுக்காய் பொடியை சித்த அல்லது நாட்டு மருந்து கடைகளில் இருந்து வாங்கி அன்றாடம் இரவில் சூடான தண்ணீரில் கலந்து பருகலாம். அது உங்கள் உடலுக்கு தரும் நன்மைகள் என்ன தெரியுமா?

கோயம்புத்தூரைச் சேர்ந்தவர் மருத்துவர் உஷா நந்தினி, இவர் தனது சமூக வலைதளப் பக்கங்களில் சித்த மருத்துவக் குறிப்புக்களை வழங்கி வருகிறார். அதன் மூலம் அவர் சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். சித்த மருத்துவர் உஷா நந்தினி புதுயுகம் டிவிக்கு கொடுத்த பேட்டியில் கடுக்காய் குறித்து விளக்கியுள்ளார்.

*...