இந்தியா, மார்ச் 16 -- ஏ.ஆர்.ரஹ்மான் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வெளியான தகவல்தான் இன்று சோசியல் மீடியாவில் பரபரப்பு செய்தி. வழக்கம் போல ஏ.ஆர்.ரஹ்மான் உடல் நலம் குறித்த வதந்திகள் வரிந்து கட்டிக்கொண்டு வர, மருத்துவமனை தரப்பே அவரது உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டு விட்டது.

அந்த அறிக்கையில், ' ஏ.ஆர். ரஹ்மான் அவரது உடலில் நீர்ச்சத்து பற்றாக்குறை அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், பின், அவர் வழக்கமான பரிசோதனைகளுக்குப் பின் வீட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டதாகவும் கூறியுள்ளனர். இந்த அறிக்கையை, மருத்துவ சேவை இயக்குநர் வெங்கடாசலம் வெளியிட்டுள்ளார்.

அண்மை காலமாக தொடர்ந்து சோதனைகளை சந்தித்து வரும் ஏ.ஆர்.ரஹ்மான், வாழ்க்கை ஏன் நிரந்தமற்றது என்பது குறித்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிஹைண்ட்வுட்ஸ் யூ...