இந்தியா, மார்ச் 10 -- * ஒருத்தன் பழச்சாறு குடிக்கும்போது எல்லா கதவையும் சாத்திக்கிட்டு குடிச்சானாம், ஏன்?

ஏன்னா, அது சாத்து குடி பழத்தின் சாறாம். ஹாஹாஹா!

* 3 தாத்தா சேர்ந்து கரும்ப தோட்டத்துக்கு போனாங்களாம். அதுல இரண்டு பேர் மட்டும் கரும்பு சாப்டாங்களாம். ஒருத்தர் மட்டும் சப்டலயாம். ஏன்?

ஏன்னா அவர் சுகர் பேஷன்ட்டாம். ஹாஹாஹா!

* ஹாஸ்பிட்டலுக்கு எப்படி போகணும்?

வேற எப்படி? நோயோடத்தான். ஹாஹாஹா!

* நான் வெஜ் காய் எது?

முட்டை கோஸ்தான். வேற எது? அதில் தான் முட்டை உள்ளதே. ஹாஹாஹா!

* முட்டைக்கு நடுவுல என்ன இருக்கும்?

மஞ்சள் கருன்னு உங்கள் சயின்டிஸ்ட் மூளை கூறும்,

ஆனா சாரிங்க, முட்டைக்கு நடுவுல 'ட்' தான் இருக்கும். ஹாஹாஹா!

* தூங்குறதுக்கு முன்னாடி ஏன் குட் நைட் சொல்றோம்?

ஏன்னா தூங்கிட்டா சொல்ல முடியாதுல்ல அதான். ஹாஹாஹா!

* கிணத்துக்குள்ள ...