இந்தியா, மார்ச் 2 -- டாக்டர் என்ன பிரச்னை உங்களுக்கு?

எனக்கு என்ன வயசுன்னு தெரியாதது தான் பிரச்சனை டாக்டர்

அப்படியா?

ஆமா டாக்டர் இப்ப பொண்டாட்டி புள்ள குட்டிகளோட வசதியாயிருந்தாலும் சின்ன வயசுல அப்பா அம்மா இல்லாமலயே வளந்துட்டதால வயசு தெரியல,

இப்ப என்ன உங்க வயசு அவ்ளோதானே?

ஆமா டாக்டர், ஆமா?

சரி இப்ப நான் கேக்குற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லுங்க கண்டுபிடிச்சிடலாம், சிஸ்டர் இங்க வாங்க நான் சொல்றத எழுதிக்குங்க.

உங்க பேரென்ன?

ராமநாதன்.

என்ன தொழில் பண்றீங்க?

பைனான்ஸ்.

நைட்டு நல்லா தூங்குவீங்களா?

கடவுள் புண்ணியத்துல படுத்தவுடனே தூங்கிடுறேன் டாக்டர்.

சந்தோஷம், தூக்கத்துல கனவுலாம் வருமா?

நெறய டாக்டர்

அந்த கனவுல நடிகைகளெல்லாம் வர்றாங்களா?

ஆமா டாக்டர்.

எந்த மாதிரி நடிகைங்க?

ரேவதி, அமலா மாதிரியான நடிகைங்க.

சிஸ்டர், 45ன்னு நோட் பண்ணி...