இந்தியா, பிப்ரவரி 24 -- ஒருத்தன் தினமும் ஒரு மரத்துக்கு தண்ணீ ஊத்துனானாம். ஆனா அந்த மரம் வளரவே இல்லையாம். ஏன்?

ஏன்னா அது போஸ்ட் மரமாம் ஹாஹாஹா!

காசு ஏன் நம்ம வீட்டுக்கு வர மாட்டேங்குதுன்னு தெரியுமா?

ஏன்னா, அதுக்கு நம்ம வீட்டு அட்ரஸ் தெரியாதாம். ஹாஹாஹா!

ஒருத்தர் டியூப் லைட்ட பார்த்து சிரிச்சாராம். ஏன்?

ஏன்னா அதுல சோக் இருக்காம். ஹாஹாஹா!

ஒரு நாள் ஆல்ஃபாபெட்ஸ்க்கெல்லாம் ரன்னிங் ரேஸ் வெச்சாங்களாம். எல்லா லெட்டர்ஸ்ம் ஓடிப்போச்சாம். ஆனா எஸ் மட்டும் நீந்தி போச்சாம். ஏன்?

ஏன்னா, அதுக்கு முன்னாடி ஆறு இருந்துச்சாம். ஹாஹாஹா!

பறவைகள் எல்லாம் ஏன் வேற நாட்டுல இருந்து நம்ம நாட்டுக்கு பறந்து வருது?

நடந்து வந்தா லேட் ஆகும். அதான். ஹாஹாஹா!

மேலும் வாசிக்க - நீங்கள் மேலும் சிரிக்க இப்டிக்கா ஒரு கிளிக்

மேலும் வாசிக்க - மேலும் மேலும் சிரிக்க அப்டிக்க...