இந்தியா, பிப்ரவரி 25 -- அரிசியில் இட்லி செய்வதுபோல் தற்போது சிறு தானியங்கள், நவதானியங்கள் என கிட்டத்தட்ட அனைத்து பருப்பு வகைகளிலும் இட்லிகள் செய்யப்படுகிறது. அதற்கு காரணம், ஆவியில் வேகவைப்பதால், இட்லி மிகவும் நல்ல உணவாக உள்ளது. எவ்வித தொந்தரவும் கொடுக்காத ஒன்றாக உள்ளது. எனவே மக்கள் அனைத்து வகை பருப்புகளிலும் இட்லிகளை செய்கின்றனர். கடலை பருப்பில் கூட இட்லி செய்ய முடியும் என்றால் உங்களுக்கு ஆச்சர்யமாக உள்ளதா? ஆமாம் கடலை பருப்பில் இட்லி செய்வது எப்படி என்றுதான் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே கடலை பருப்பில் இட்லி செய்து பாருங்கள். அது மிக்க சுவையானதாக இருக்கும். இங்கு கொடுக்கப்பட்டுள்ள ரெசிபி செய்து சாப்பிட்டு பாருங்கள்.

* கடலை பருப்பு - 200 கிராம்

* பச்சை பட்டாணி - 25 கிராம்

* கேரட் - 25 கிராம்

* இஞ்சி - அரை இன்ச்

* கடுகு - ஒரு ஸ்பூன்...