இந்தியா, மே 17 -- ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களில் நிழல் கிரகமாக விளங்கக் கூடியவர் ராகு பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். ராகு பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக ராகு பகவான் விளங்கி வருகின்றார்.

ராகு பகவானுக்கு சொந்த ராசி கிடையாது. இந்நிலையில் ராகு பகவான் தற்போது மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருகின்றமே பதினெட்டாம் தேதி அன்று மீன ராசியில் இருந்து ராகுபகவான் கும்ப ராசிக்கு செல்கின்றார்.

ராகு பகவானின் கும்ப ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்டு சில ராசிகளுக்கு கஷ்டத்தை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்....