இந்தியா, ஏப்ரல் 11 -- கஜகேசரி யோகம்: ஜோதிட சாஸ்திரத்தின் படி கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது இடத்தை மாற்றுவார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள் இந்த காலகட்டத்தில் 12 ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் என கூறப்படுகிறது.

ஜோதிட சாஸ்திரத்தின் படி சூரியன் தந்தையாகவும், சந்திரன் தாயாகவும் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. நவகிரகங்களில் மிகவும் வேகமாக நகரக்கூடியவர் சந்திரன். இவர் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ரசித்துக் கொள்ள 2 1/2 நாட்கள் எடுத்துக் கொள்கிறார். சந்திரன் மற்ற கிரகங்களோடு இணையும் பொழுது சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

அந்த வகையில் ஏப்ரல் 10ம் தேதி அன்று சந்திரன் கன்னி ராசிக்கு சென்றார். குருபகவான் ரிஷப ராசியில் பயணம் செய்து வருகின்றார். சந்திரன் மற்றும் குரு இருவரும் இருக்கும் இட...