இந்தியா, மார்ச் 19 -- நெல்லையில் ஓய்வு பெற்ற காவலர் ஜாகீர் உசேன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த முகமது தௌபிக் என்ற கிருஷ்ண மூர்த்தியை காவல்துறையினர் சுட்டுப்பிடித்தனர்.

நெல்லை டவுண் பகுதியை சார்ந்த ஓய்வு பெற்ற உதவி காவல் ஆய்வாளர் ஜாகீர் உசேன் நேற்றைய தினம் (மார்ச் 18) படுகொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் தொடர்புடையதாக நெல்லை டவுன் பகுதியைச் சேர்ந்த அக்பர் ஷா மற்றும் தச்சநல்லூர் பால் கட்டளை பகுதியைச் சேர்ந்த கார்த்திக் ஆகிய இருவர் நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியில் தனிப்பிரிவு அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் எஸ்.ஐ., ஜாகீர் உசேன். நெல்லை டவுன் தடிவீரன் கோயில் தெருவில் வசித்து வருகிறார். ரம்ஜான் நோன்பு இருந்து வரும் அவர், இன்று அதிகாலை அப்பகுதியில் உள்ள தர்காவுக்கு தொழுகை ந...