இந்தியா, ஜூன் 23 -- ஓமவல்லி இலைகள் அல்லது கற்பூரவல்லி இலைகளை, அதன் தண்டுகளை நட்டு வைத்து எளிதாக வீட்டில் வளர்த்துவிடலாம். ஒரே ஒரு செடியை பறித்து நட்டுவைத்தால் போதும், வீட்டில் அடர்ந்து படர்ந்து வளர்ந்துவிடும். பல ஆண்டுகளாக இந்தியாவின் பாரம்பரிய மருத்துவத்தின் அங்கமாக ஓமவல்லிச் செடிகள் உள்ளது. இது பல்வேறு உடல் உபாதைகளுக்கு நிவாரணம் தருகிறது. இந்த ஓமவல்லி என்ற மூலிகைச் செடி தென்னிந்தியாவில்தான் பரவலாக உள்ளது. இதன் எண்ணற்ற நற்குணங்களுக்காக இது அறியப்படுகிறது. இது உங்கள் உடலில் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கச் செய்கிறது மற்றும் செரிமானத்தைத் தூண்டுகிறது. இது இதன் மருத்துவ குணங்களுக்காக பல தலைமுறைகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஓமவல்லி இலைகளில் எண்ணற்ற மருத்துவ குணங்களும், ஊட்டச்சத்துக்களும் உள்ளது. இந்த இலைகளில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள...