இந்தியா, மார்ச் 17 -- ஓமத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் என்ன? அவை உடலுக்கு என்ன நன்மைகளைக் கொடுக்கிறது என்று பாருங்கள். மணம் நிறைந்த ஓமம், உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைக் கொடுக்கிறது. இது சளி, இருமல் மற்றும் வாயுத்தொல்லை போன்றவற்றுக்கு வீட்டு தீர்வாகிறது. இது மேலும் எண்ணற்ற நன்மைகளை உடலுக்கு தருவதாக ஊட்டச்சத்து நிபுணர் அர்ச்சனா கூறினார். இது உடலில் அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. இதனால் நமது இதயத்துக்கு நல்லது என்கிறார். இதில் உள்ள ஆன்டிமைக்ரோபியல் உட்பொருட்கள் செரிமானம், வயிறு உப்புசம் ஆகியவற்றைப் போக்குகிறது. இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, கொழுப்பு அளவை முறைப்படுத்துகிறது. இதன் வீக்கத்துக்கு எதிரான குணங்களும் உடலுக்கு நன்மை சேர்க்கிறது. இது மூச்சுக்குழாய் அழற்சிக்கு வீட்டுத் ...