இந்தியா, மே 19 -- இந்த மே மாதத்தின் நான்காவது வாரத்தில் சில திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்கள் ஓடிடியில் வெளியாக தயாராக உள்ளன. பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படங்கள் எதுவும் இந்த வாரம் வெளியாகவில்லை. நடுத்தர ரக திரைப்படங்கள் மற்றும் சீரிஸ்கள் வெளியாகவுள்ளன. இவற்றில் ஐந்து ரிலீஸ்கள் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் உள்ளன.

மேலும் படிக்க| உங்க எதிர்பார்ப்புக்கும் மேல இருக்கும்.. தனி ஒருவன் 2 அப்டேட் கொடுத்த டைரக்டர்...

மலையாள காதல் நாடக திரைப்படமான அபிலாஷம் மே 23ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோ, மனோரமா மேக்ஸ் ஓடிடி தளங்களில் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது. மார்ச் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த திரைப்படத்தில் சைஜு குருப், தன்வி ராம், அர்ஜுன் அசோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித...