இந்தியா, பிப்ரவரி 23 -- தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக நாம் வகைகளில் வளர்ச்சி அடைந்துள்ளோம். ஒவ்வொரு துறையும் அதன் நவீன தொழில்நுட்பத்தை தன்னகத்தே கொண்டு சிறந்த முறையில் வளர்ந்து வருகிறது. பெருமளவு வளர்ச்சியடைந்த பின்னரும் இந்த தொழில்நுட்ப வளர்ச்சிகள் நமக்கு சில உடல் நல கோளாறுகளையும் ஏற்படுகிறது என ஒரு கருத்து நிலவி வருகிறது. உதாரணமாக நாம் தினந்தோறும் பயன்படுத்தும் டிஜிட்டல் சாதனங்களின் திரை நமது கண்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் நமது சூழ்நிலையில் நமது வேலை காரணமாக வேறு வழியில்லாமல் டிஜிட்டல் திரையை நாள் முழுவதும் பயன்படுத்தும் கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளோம். இந்த சமயத்தில் இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்திற்கு மேலாக டிஜிட்டல் திரையை பயன்படுத்தினால் கண் கோளாறுகள் ஏற்படும்...