இந்தியா, மார்ச் 21 -- ஒரு படம் ஹிட்டாகிவிட்டால் அதில் நடித்த ஹீரோவாக இருந்தாலும், ஹீரோயினாக இருந்தாலும் அடுத்த படத்தில் சம்பளத்தை கணிசமாக உயர்த்தி விடுகிறார்கள். அவர்களின் மார்கெட் உயர்ந்து விட்டதால் தயாரிப்பாளர்களும் நடிகர், நடிகைகள் கேட்கும் சம்பளத்தையும் தர முன் வருகிறார்கள். ஒரு படத்துக்கு ரூ. 100 கோடி வரை சம்பளமும் ஹீரோக்களுக்கு தரப்படுகிறது. ஹீரோக்களை போல் தற்போது ஹீரோயின்களும் கோடிகளில் சம்பளத்தை பெறுகிறார்கள்.

அந்த வகையில் பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாக வலம் வந்த இவர் தற்போது ஹாலிவுட் நடிகையாக மாறியிருக்கும் நிலையில், மீண்டும் இந்திய சினிமாவுக்கு கம்பேக் கொடுக்கிறார். மீண்டும் இந்திய சினிமாவில் நடிக்க வரும் அவருக்கு ரூ. 30 கோடி சம்பளமாக தரப்படுகிறது.

சுமார் ஆறு ஆண்டுகள் கழித்து இந்திய சினிமாவுக்கு கம்பேக் கொடுக்கிறார், பாலி...