இந்தியா, டிசம்பர் 10 -- அன்றாட உணவில் நாம் அதிகம் சேர்த்துக்கொள்ளும் உணவு வகைகளுள் ஒன்றுதான் தயிர். இதை தினமும் நீங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளவதால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். அது உங்களுக்கு அதை சேர்த்துக்கொள்வதான் முக்கியத்துவத்தை உணர்த்தும். தயிர் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. தயிரைக்கடைந்து, வெண்ணெயை எடுத்துவிட்டு, மோராக்கி, அதில் நீரை அதிகம் சேர்த்து பருகினால் உடலின் சூட்டை தணிக்க உதவும் முக்கிய உணவாக இருக்கும். இந்த தயிரை கொழுப்பு சேர்த்து தயிராகவே எடுத்துக்கொள்வதும் உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைத் தரும். தயிர் யோகர்ட் என்றும் அழைக்கப்படுகிறது. இது ஊட்டச்சத்துக்களின் குடோன் எனுமளவுக்கு சத்துக்கள் நிறைந்தது. குறிப்பாக இதில் ப்ரோபயோடிக்குகள் அதிகம் உள்ளது. இது உங்கள் செரிமான மண்டலத்தின் ...