இந்தியா, மார்ச் 6 -- உலக ரசிகர்களால் இசைஞானி என்று அழைக்கப்படக்கூடிய இளையராஜாவின் முதல் சிம்பொனியின் நேரடி நிகழ்ச்சி லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் வருகிற 8ஆம் தேதி (08.03.2025) நடைபெற இருக்கிறது.

இதனையொட்டி திரைபிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், ரசிகர்கள் என பலரும் அவரை வாழ்த்தினர். இந்நிலையில், இந்த நிகழ்ச்சிக்காக இன்று லண்டன் புறப்படும் இளையராஜா, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

மேலும் படிக்க | தமிழ் சினிமா ரீவைண்ட்: தமிழில் வித்தியாசமான பேய் படம்.. ரஜினியின் கல்ட் கிளாசிக்.. மார்ச் 6 தமிழ் படங்கள் ரிலீஸ் லிஸ்ட்

அப்போது அவர் பேசியதாவது ' என்னுடைய சிம்பொனி இசையை வெளியிடுவதற்காக நான் லண்டன் செல்கிறேன். அங்கே இந்த இசையை உலகின் தலைசிறந்த இசைக்குழு வாசித்து, ரசிகர்கள் எல்லாம் கேட்டு மகிழ்ந்துவெளியிட இருக்கிறோம...