இந்தியா, ஏப்ரல் 19 -- தமிழ் காலண்டர் 19.04.2025: இந்து சாஸ்திரத்தின் படி, வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்படுகிறது. அந்தவகையில், சனிக்கிழமையான இன்று சனி பகவான், பெருமாள், ஆஞ்சநேயருக்கு உகந்த நாளாக இருந்து வருகிறது. குறிப்பாக சனீஸ்வர பகவானின் ஆதிக்கம் நிறைந்த நாளாகும். இந்த நாளில் அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று, ஸ்ரீசனீஸ்வர பகவானுக்கு எள்தீபம் ஏற்றி வழிபடுவது நற்பலன்களை தரும்.

அதேபோல், பெருமாளுக்கு துளசி மாலை சார்த்தி வழிபட்டால் சகல ஐஸ்வரியங்களும் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இத்தகைய சிறப்புக்குரிய நாளான இன்று (ஏப்ரல் 19) பூஜைக்கு உரிய நல்ல நேரம், இன்றைய விஷேசங்கள், நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம் குறித்த முக்கிய தகவல்களை தமிழ் நாள்காட்டியின் மூலம் தெரிந்துகொள்வோம்.

தமிழ் ஆண்டு : விசுவாவசு வருட...