இந்தியா, மார்ச் 24 -- நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்க வரி வசூல் மையங்கள் மூலம் பொதுமக்களிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய்கள் வரி ஈட்டப்பட்டு வருகின்றன. இதையடுத்து வரி வசூல் தொடர்பான தகவல் நாடளுமன்றத்தில் அரசாங்கத்தால் வழங்கப்பட்டது.

அதன்படி, வரலாற்று சிறப்புமிக்க கிராண்ட் டிரங்க் சாலையில் அமைந்துள்ள சுங்க வரி வசூல் மையமும், டெல்லி மும்பை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சுங்க வரி வசூல் மையமும், இந்தியாவின் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சுங்க வரி வசூல் மையங்களும் நாட்டிலேயே அதிக வருவாய் ஈட்டும் சுங்க வரி வசூல் மையங்களாக திகழ்கின்றன.

இது மட்டுமல்லாமல், இந்த பிளாசாக்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆயிரம் கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளன. கோவிட் காரணமாக அந்த காலகட்டத்தில் வர்த்தகம் மற்றும் போக்குவரத்து ஸ்தம்பித்திருந்த...