இந்தியா, மே 19 -- சூர்யா 46 படத்தின் பூஜை தொடர்பான பணிகள் இன்று தொடங்கப்பட்டு இருக்கின்றன. அதுமட்டுமல்ல, படக்குழு தொடர்பான விவரங்களும் வெளியிடப்பட்டு இருக்கின்றன.

நடிகர் சூர்யாவின் அடுத்தபடத்தை 'வாத்தி' ' லக்கி பாஸ்கர்' உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி பிரபலமான இயக்குநர் வெங்கட் அட்லூரி இயக்க இருக்கிறார். இந்த அறிவிப்பை நடிகர் சூர்யாவே ஹைதராபாத்தில் நடந்த ரெட்ரோ புரோமோஷனின் போது அறிவித்தார்.

மேலும் படிக்க | Suriya 45: மக்கள் கொடுத்த புகார்.. இரவொடு இரவாக படப்பிடிப்பை நிறுத்திய காவல்துறை! - சூர்யா 45 படத்திற்கு என்ன ஆனது?

இந்தப்படத்தின் பூஜை இன்று நடந்து இருக்கிறது. இந்த விழாவை தெலுங்கில் பிரபல இயக்குநராக வலம் வரும் த்ரிவிக்ரம் தொடங்கி வைத்தார். இந்தப்படத்தில் நடிகர் சூர்யாவுடன் பிரேமலு படத்தில் நடித்து பிரபலமான மமிதா பைஜூ நடிக்க இருக்கிறா...