இந்தியா, மார்ச் 16 -- வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய் பகவான். இவர் 45 நாட்களுக்கு ஒருமுறை ராசியையும், குறிப்பிட்ட கால இடைவெளியில் நட்சத்திரத்தையும் மாற்றுவார். அந்தவகையில் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் செவ்வாய் சனி பகவானின் நட்சத்திரமான பூச நட்சத்திரத்திற்கு செல்ல உள்ளார்.

தன்னம்பிக்கை, வீரம், விடா முயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழும் செவ்வாய் பகவானின் இடமாற்றத்தால் மங்கள புஷ்ய யோகம் உருவாக இருக்கிறது. இந்த யோகத்தின் தாக்கம் 12 ராசிகளுக்கும் பெரிய மாற்றத்தை கொடுக்கும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

ஜோதிடத்தில், பூசம் நட்சத்திரம் 27 நட்சத்திரங்களின் ராஜாவாக கருதப்படுகிறது, அதன் அதிபதி கர்மாவை வழங்கும் சனி பகவான். இந்த சூழலில் ஏப்ரல் 12 அன்று காலை 6:32 மணிக்கு செவ்வாய் பூச நட்சத்திரத்திற...