இந்தியா, ஏப்ரல் 7 -- தமிழ்நாட்டின் நம்பர் 1 துரோகி யார்?' எனக் கேட்டால் அரசியல் தெரியாத சிறுவன் கூட பழனிசாமியை கை காட்டுவான் என சட்டத்துறை அமைச்சர் மாண்புமிகு ரகுபதி தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், யார் அந்தத் தியாகி? என்ற அதிமுகவின் முனை மழுங்கிய கேள்விக்கு ''நொந்து போய் நூடுல்ஸ் ஆன அதிமுக தொண்டர்கள்தான் அந்த தியாகிகள்'' என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அளித்த பதிலில், நொந்து போன எதிர்க் கட்சித் தலைவர் வீராவேசமாகக் கருத்து சொல்லியிருக்கிறார்.தியாகியை விடுங்கள். துரோகியைத் தெரியுமா? 'தமிழ்நாட்டின் நம்பர் 1 துரோகி யார்?' எனக் கேட்டால் அரசியல் தெரியாத ஆறாம் வகுப்பு மாணவன் கூட எடப்பாடி பழனிசாமியை கை காட்டுவான். அரசியல் அறத்தை அடகு வைத்து விட்டு, துரோகங்களை மட்டுமே செய்து முன்னேறியவர் பழனிசாமி. அம்மையார் ...