இந்தியா, மார்ச் 20 -- Ekadashi Fasting: ஏகாதசி விரதம் விஷ்ணு பகவானுக்கு உரிய முக்கிய விரதமாக கருதப்படுகிறது. குறிப்பாக வைகுண்ட ஏகாதசித் திருநாள் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. தமிழ் மாதங்களில் மார்கழி மாதத்தில் வளர்பிறையில் வரும் ஏகாதசி தான் வைகுண்ட ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது.

தேய்பிறையில் வரக்கூடிய ஏகாதசி உற்பத்தி ஏகாதசி என்று அழைக்கப்படுகின்றது. மாதம்தோறும் வரக்கூடிய ஏகாதசி அன்று விரதம் இருப்பவர்கள் சகல யோகங்களையும் அடைவார்கள் என கூறப்படுகிறது. அந்த வகையில் பெருமையாக போற்றப்படும் இந்த ஏகாதசியில் வரலாறு குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

முரண் என்ற அசுரன் தேவர்கள் முனிவர்கள் மற்றும் மனிதர்கள் என அனைவருக்கும் தொல்லை கொடுத்து வந்தார். அந்த அசுரனை அழித்து தங்களை காப்பாற்றுமாறு சிவபெருமானிடம் அனைவரும் வேண்டிக் கொண்டனர். அவர்களை ம...