இந்தியா, மார்ச் 15 -- தினமும் எலுமிச்சை சாறு பருகுவதால் உங்கள் உடலுக்கு எண்ணற்ற சத்துக்கள் கிடைக்கிறது. நீங்கள் இதை கோடைக்கால குளிர்விக்கும் பானமாகவும் பருகலாம் அல்லது கழிவுநீக்க பானமாகவும் பருகலாம். ஒரு நாளில் ஒருமுறை இதை பருகுவது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. எலுமிச்சையில் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளது. அதுதான் நோய் எதிர்ப்பை வளர்க்க முக்கியமாக உதவுவது ஆகும். இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் மினரல்கள் எளிதில் தாகத்தை தீர்க்கக்கூடியவையாகும். இது எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடியது. இதில் உள்ள சத்துக்கள் என்னவென்றும், அந்த சத்துக்கள் உங்கள் உடலுக்கு எப்படி உதவும் என்பதையும் பாருங்கள்.

எலுமிச்சையில் வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் உள்ளது. இது நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கும் முக்கிய ஊட்டச்சத்து ஆகும். தினமும் எலுமிச்சை பழச்...