இந்தியா, மே 19 -- விஷாலும், தானும் திருமணம் செய்ய இருப்பதாக சாய் தன்ஷிகா அறிவித்து இருக்கிறார்.

சாய் தன்ஷிகா பேசும் போது, 'இந்த மேடையில் நான் உட்கார்ந்து இருக்கும் போது தான் நான் எவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கிறேன் என்பது எனக்கு தெரிகிறது. கிட்டத்தட்ட இது ஒரு குடும்ப சந்திப்பு போல இருக்கிறது. இந்த மேடை எனக்கு மிகவும் முக்கியமான மேடை. நான் பேச முடியாமல் நின்று கொண்டிருக்கிறேன்.

கடவுளுக்கு மிகவும் நன்றி; இந்த நாளை அவர் ஏற்படுத்தி கொடுத்ததற்காக. இந்த இடத்தில் தவறி போன என்னுடைய மாமாவை நினைத்துக் கொள்கிறேன். இந்தத் திரைத்துறையில் எனக்கான இடத்தை பிடிப்பதற்கு கடுமையாக போராடி இருக்கிறேன். இந்த இடத்திற்காக கடுமையாக வியர்வை சிந்திக்கி இருக்கிறேன். நான் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று.

இந்த மேடையை நாங்கள் திருமண அறிவிப்புக்கான மேடையாக நிச்சயமாக நி...